தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 86,000 ஆக உள்ளது.
சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த வைரஸால் வல்லரசு நாடான அமெரிக்கா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்கியுள்ளது.
ஆகையினால் கொரோனா கணிசமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவிலுள்ள பல பகுதிகளில் பரவி 2 வாரங்களில் சராசரியாக 1,00,000 பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஓமிக்ரான் ஒரு பக்கம் பரவி வர மீண்டும் அமெரிக்காவில் கொரோனா தலைதூக்கி தினந்தோறும் 86,000 பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனரான ரோச்செல்லி தெரிவித்துள்ளார்.