Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ராஜினமா..!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை கே.சி. வேணுகோபால் ராஜினமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.சி. வேணுகோபால். இவர் தனது பதவியை இன்று (டிச.11) ராஜினாமா செய்தார். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அளித்துள்ளார். அண்மையில் நடந்த கர்நாடக இடைத்தேர்தலின் முடிவுகள், நேற்று முன் தினம் (டிச.9) வெளியாகின.

Image result for K. C. Venugopal

இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தங்கள் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது உச்சக் கட்டமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கிடையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்கள் இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |