Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டில் தஞ்சமடைந்த மக்கள் நாடு திரும்ப வேண்டும்!”…. ஆப்கானிஸ்தான் அரசு கோரிக்கை…..!!

வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள், அங்கிருந்து வெளியேறினார்கள். இதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள், ஈரான் நாட்டில் தஞ்சமடைந்தனர். அதற்கடுத்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் சுமார் 14 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்தனர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சரான கலீல் ரகுமான், இவ்வாறு தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள் சுகாதாரம் இல்லாத இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மேலும், அந்த மக்கள், தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Categories

Tech |