உலக சுகாதார நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போதுவரை 89 நாடுகளில் பரவியுள்ளநிலையில் இனிவரும் காலங்களில் அதனுடைய எண்ணிக்கை இருமடங்காவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது வரை 89 நாடுகளில் மிக வேகமாக பரவியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரான் தொடர்புடைய மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இனிவரும் காலங்களில் ஓமிக்ரான் பரவலின் வேகம் இரு மடங்காவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஓமிக்ரான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் நாடுகளிலும் மிக வேகமாக பரவுவதால் இத்தொற்று தடுப்பூசிகளின் செயல்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உலக சுகாதார நிறுவனம் டெல்டாவை வகை கொரோனா மாறுபாட்டை விட ஓமிக்ரான் அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருவதாகவும் எச்சரித்துள்ளது.