இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி நர்சாக இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இளம்பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் மணிகண்டன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதனைதொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை பிடித்து சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.