அரசு பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பொம்மையகவுண்டம்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்தார். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் கம்பத்தில் இருந்து பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு சென்ருல்ல்ளர். இந்நிலையில் வீரபாண்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது வீரபாண்டி புதுப்பாலம் பைபாஸ் பிரிவு சாலையில் வைத்து எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிகொண்டது.
இந்த கோர விபத்தில் டிப்பர் லாரி டிரைவர் கேரளாவை சேர்ந்த லைசு, பேருந்து ஓட்டுனர் அமரேசன், பேருந்தில் பயணம் செய்த ஆணைமலையன்பட்டியை செல்லத்தாய், பழனிசாமி என மொத்தம் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயாடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.