நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து, தரமற்ற கட்டிடங்களை இடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அருகாமையில் பள்ளி பள்ளி இல்லையென்றால் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.