அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் டிப்பர் லாரி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடசாமி கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மாடசாமியின் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து எதிர்பாரதவிதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமியின் உடலை உடனடியாக கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு செய்த காவல்துறையினர் அரசு பேருந்து டிரைவரான துறையூர் பகுதியில் வசிக்கும் ஸ்டாலின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.