Categories
மாநில செய்திகள்

55 மீனவர்களை விடுவிக்க வேண்டும்….. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட நிலையில்,  இன்று மேலும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள நிலையில் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |