உஸ்பெகிஸ்தானிலுள்ள கேண்டீன் ஒன்றில் திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் அக்தர்யா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வந்த கேன்டீன் ஒன்றிலிருந்த 2 எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
அவ்வாறு படுகாயமடைந்த நபர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த தகவலை அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்களை சேகரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உஸ்பெகிஸ்தான் நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.