Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! இன்று 2 மணி வரை கரண்ட் இருக்காது…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மாட்டன்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பைகிராப்ட்ஸ் சாலை, பழனியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பாரதி சாலை. மேலும் ராஜா அனுமந்தலாலா தெரு, வெங்கடாசல நாயக்கன் 1 முதல் 3-வது தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அதேபோல் அடையார் பாலவாக்கம் பகுதியில் வி.ஜி.பி லேயவுட் முதல் குறுக்குதெரு, அண்ணா சாலை, பாலவாக்கம் குப்பம், சங்கரபுரம், சீசேல் அவென்யூ, ரேடியோ காலனி, சாரி அவென்யூ, சைத்தனியா அவென்யூ, ராம் கார்டன், பூங்கா தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

Categories

Tech |