Categories
பல்சுவை

சேவிங்ஸ் அக்கவுண்டு வச்சுருக்கீங்களா….? எந்த வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கும்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல்களை இதில் தெரிந்து கொள்வோம்.

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பிக்சட் டெபாசிட் எனப்படும் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். அண்மைகாலமாக பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு தொடர்ந்து கடுமையாக வட்டி குறைந்து வருகின்றது. தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு நிகரான வட்டியே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கும் கிடைக்கின்றது. இதனால் பலருக்கும் பிக்சட் டெபாசிட் முதலீடு மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. இந்நிலையில் சேமிப்பு கணக்குகளுக்கு சில வங்கிகள் அதிக வட்டி வழங்குகிறது. பிக்ஸட் டெபாசிட்டை காட்டிலும் சேமிப்பு கணக்குகளுக்கு சில நன்மைகள் உண்டு. சேமிப்பு கணக்குகளில் நம்மால் உடனடியாக பணத்தை எடுக்கவும், போடவும் முடியும்.

அதே சூழலில் வருமானமும் கிடைக்கும். எனவே தற்போதைய சூழலில் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

AU Small Finance Bank – 7%

Ujjivan Small Finance Bank – 7%

Equitas Small Finance Bank – 7%

DCB Bank – 6.5%

Suryoday Small Finance Bank – 6.25%

Categories

Tech |