Categories
மாநில செய்திகள்

மாதாந்திர மின் கணக்கீடு…. இதையாவது இந்த அரசு செயல்படுத்துமா….? ஓபிஎஸ் கேள்வி….!!!!

மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அதிக மின் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இவற்றைத் தடுக்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் என்று திமுக அரசு தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த அவர்களை வஞ்சிக்கும் வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் “மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கையை தான் திமுக அரசு எடுத்துக் கொண்டுள்ளது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். கொரோனா கொடுந்தொற்று, விஷம் போல் ஏறும் விலைவாசி, வேலையின்மை, ஊதிய உயர்வின்மை என பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதியையாவது இந்த அரசு செயல்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |