Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு வருபவர்களுக்கு எச்சரிக்கை…. இன்று முதல் கட்டுப்பாடு….!!!!

ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை வரும் பயணிகள் பரிசோதனை மேற்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளை பரிசோதனை மேற்கொள்வதற்கு இன்று முதல் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. நேற்று வெளிநாடுகளிலிருந்து கர்நாடகா வந்த 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இனி சென்னை வரும் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |