Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவேன்…. சீமான் புதிய அதிரடி….!!!!

சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவிப்பதாகவும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முழு தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தற்போதுள்ள தமிழ் தாய் வாழ்த்தில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் அனைவரும் பாட வேண்டும் என்ற கோரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை சின்ன போரூர்-ல் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றி விடுவோம். தமிழ் தாய் வாழ்த்து இந்த பாடலாக இருக்காது. வேறு பாடலாக இருக்கும். தமிழ்தாய் வாழ்த்து முழு பாடலையும் கொண்டுவர வேண்டும் என்று பாஜக கூறினால் அது பாராட்டத்தக்கது. மேலும் தமிழ் புத்தாண்டு போலவே தமிழ்தாய் வாழ்த்தும் ஒவ்வொரு ஆட்சியின் போதும் மாறி மாறி வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |