நர்சிங் மாணவியை ஏமாற்றிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 21 வயதுடைய இளம் பெண் 3-ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவி தனது சொந்த ஊருக்கு சென்று அங்கிருக்கும் மில்லில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மில்லில் வேலை பார்த்த விஜி என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து விஜி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த மாணவி விஜியுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த விஜி மாணவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மாணவி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.