ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை கண்டு பிடிப்பதற்காக தனிப்படை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்காணித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.