கரடி தாக்கியதால் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருக்கும் கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள புதர் செடிகளுக்குள் பதுங்கியிருந்த கரடி ராகுல் மீது பாய்ந்து அவரை பலமாக தாக்கியுள்ளது.
இதனால் அலறி துடித்த ராகுலின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததால் கரடி ராகுலை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியது. இதனையடுத்து ராகுலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.