நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நியாயம் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.