Categories
உலக செய்திகள்

“இன்று முதல் பிரிட்டன் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!”….. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!

ஜெர்மன் அரசு, ஓமிக்ரான் தொற்றை தடுக்க, தங்கள் நாட்டிற்கு வரும் பிரிட்டன் மக்கள் 14  நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது.

பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, சுமார் 15-ற்கும் அதிகமான நாடுகள், பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்க தடை அறிவித்துள்ளது.

இதனிடையே, ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு பிரிட்டனில் சுமார் ஏழு நபர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஜெர்மன் அரசு, தங்கள் நாட்டிற்குள் வரும் பிரிட்டன் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டிருந்தாலும் கட்டாயமாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இந்த விதிமுறை இன்று முதல் ஜனவரி மாதம் 3-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறது. மேலும், பிரிட்டனை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் வைத்திருக்கிறது.

Categories

Tech |