நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாக மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக நெல்லை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.