Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரிமீது மோதியதில் ஒருவர் பலி …!!

தேனி மாவட்டம் அருகே  இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஒட்டி வந்தவர்  எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது .

 

தேனி அருகே வீரபாண்டியை அடுத்து  உப்பார்பட்டியை  சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து உள்ளது.

 

இதனை பார்த்த வேல்முருகன் அச்சமடைந்து தமது வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த அனைவரும் கீழே விழுந்த நிலையில் எதிரே வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

மேலும் அவரது மனைவி மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதனை அறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருந்துவமனையில் அனுமதித்தனர் . சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி யில் விபத்து காட்சிகள் பதிவாகியுள்ளது .

Categories

Tech |