‘யானை’ படத்தின் டப்பிங் பணிகளை பிரியா பவானி சங்கர் முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, சரத்குமார்,யோகி பாபு, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில், அருண் விஜய் மற்றும் ராதிகா சரத்குமார் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தன் பகுதிக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இவர் தெரிவித்துள்ளார்.
Wrapped up dubbing for #yaanai thanks to the entire team for making it a pleasant experience overall 😊 we hope to see you all soon in theatres! #directorHari @arunvijayno1 @gvprakash pic.twitter.com/Rf3KDWY598
— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 18, 2021