Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த வைர வளையலை வாங்கிக்கோங்க…. நண்பருடன் சிக்கிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தொழில் அதிபரின் வீட்டில் வைர வளையல் திருடிய குற்றத்திற்காக இளம்பெண்ணையும் உடந்தையாக இருந்த நண்பரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நகைக் கடைகளுக்கு இளம் பெண்ணும், ஒரு வாலிபரும் சென்று வந்துள்ளனர். அந்த இளம்பெண்ணின் கையில் வைர வளையல் இருந்துள்ளது. இதனை விற்க முயன்ற போதும் நகை கடைக்காரர்கள் யாரும் வாங்கவில்லை. மேலும் சந்தேகமடைந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அந்த இளம்பெண் மதுரையைச் சேர்ந்த முத்துப்பேச்சி என்பதும், வாலிபர் அவரது நண்பரான மாரிச்செல்வம் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் காளப்பட்டியில் வசிக்கும் தொழிலதிபரான பாலாஜி என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். பாலாஜியின் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சமயத்தில் முத்துப்பேச்சி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர வளையலை திருடி தனது நண்பருடன் அதனை விற்க முயன்ற போது காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |