மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கார் டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் 16 வயது மாணவி படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சர்வேஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சர்வேஸ்வரன் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சர்வேஸ்வரனை கைது செய்துள்ளனர். மேலும் அந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.