Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வழக்கில் மாமியார் மற்றும் மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் பெரியம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் இப்ராஹிம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் பறித்த தங்க நகையை தனது மாமியாரான அஞ்சலை என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளார். இதனை அடுத்து தங்க நகையை மீட்ட காவல்துறையினர் அஞ்சலையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |