Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“மகள் என்னை விட்டு போயிட்டா” துக்கத்தில் விவசாயி எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பீல்பாடி கிராமத்தை விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினி தற்கொலை செய்து கொண்டதால் செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது வயலுக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |