Categories
தேனி மாவட்ட செய்திகள்

பூங்காவிற்கு சென்ற தொழிலாளி…. செய்த விபரீத செயல்…. தேனியில் பரபரப்பு….!!

கணவன்-மனைவி தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்பத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பாண்டி சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பாண்டி தேனி பென்னிகுயிக் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள போன்ற பூங்காவிற்கு பெட்ரோல் கேனுடன் சென்றுள்ளார்.

அப்போது திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி கொண்டு பாண்டி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயை அனைத்து பாண்டியை தேனி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் தீ உடல் முழுவதும் பரவி மிகவும் ஆபத்தான நிலையில் பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |