தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா, வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆளுநரும் அப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர் என் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அவர் தமிழகத்தில் சக்திவாய்ந்த முதலமைச்சராக ஸ்டாலின் விளங்குகிறார்.
இன்று என்ன சாதித்தீர்களோ அது உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு எப்போதும் உங்களை உயர்த்தும் என்று பேசிய ஆளுநர் கொரோனா இன்னும் போகவில்லை. புது புது வகையில் மாற்றமடைந்து கொண்டே உள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.