Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த அரசு பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலானோர் தேர்வில் பங்கேற்க ஆர்வத்துடன் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் அரசு பணியாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த வகுப்புகளில் இலவசமாக, முறையான திட்டமிடல் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் அரசு ஏற்பாடு செய்துள்ள பயிற்சி வகுப்புகள் தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய துணை இயக்குனர் மணி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவற்றில் சேலம் மையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதுவரையிலும் 180 பேர் பயிற்சி மையத்தில் சேர்ந்து உள்ளனர். இவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் புதிதாக பயிற்சி வகுப்பில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது.

தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தையும் தேர்வர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி வழங்க ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தினசரி நடப்பு நிகழ்வுகள் தொடர்பான பதிவு தேர்வர்களுக்கு அளிக்கப்படுகிறது. தேர்வர்களுக்கு வினா, விடைகள் தொகுப்பு அளிக்கப்பட்டு தினசரி அரைமணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வர்களுக்கு தேர்வு தொடர்பான தகவல்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்படுகிறது. முற்றிலும் இலவசமாக அனைத்து தரப்பினருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் எஸ்எஸ்சி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Categories

Tech |