நடுத்தர வயதுள்ள ஒருவர் தனது பள்ளி காதலியைகரம் பிடிக்க மனைவியை கொன்று நாடகமாடிய சப்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது சடலத்தை கைப்பற்றிய வள்ளியூர் போலீசார் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர்.
எனினும் போலீசாருக்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை . இதற்கிடையே கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த சங்கனாசேரி பிரேம் குமார் என்பவர் தனது மனைவி வித்யா காணாமல் போய்விட்டதாகவும், அவருக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் உதயம் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான வித்யா குறித்து விசாரணை மேற்கொண்டனர் .
பிரேம்குமார் மற்றும் வித்தியாவின் செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தபோது இருவரின் செல்போன் எண்களும் திருவனந்தபுரத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருந்ததை கண்டுபிடித்த போலீசாருக்கு பிரேம்குமார் மீது சந்தேகம் இருந்ததால் அவரை அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காத பிரேம்குமார் தனது குழந்தைகளுடன் சென்று உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதற்கிடையே வித்தியா பயன்படுத்திய செல்போன் பீகாரில் இருப்பதுபோல் சிக்னல் காட்டியது இதன் காரணமாக குழப்பம் அடைந்த போலீசார் வித்தியா ஆண் நண்பருடன் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். பிரேம்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க நிலையில் வழக்கும் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் மாயமான மாணவி வித்யா என்பது தெரியவந்தது இதையடுத்து மீண்டும் வழக்கை தூசி தட்டிய கேரளா போலீசார் அவரைத் தேடியபோது அவர் திருவனந்தபுரத்தில் ஒருவருடன் வசித்து வந்தது தெரியவந்தது .
இதையடுத்து அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர் .அப்போதுஅவர் பள்ளியில் படிக்கும் போது சுனிதா பேபி என்ற பெண்ணை காதலித்துள்ளார் . அந்த காதல் முடிவுக்கு வந்துள்ளது பின் அவரவர் பிரிந்து படிப்பு வேலை திருமணம் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர் .பிரேம்குமார் வித்யாவை திருமணம் செய்து கொண்டார் .இந்த தம்பதிக்கு குழந்தைகள் இருந்த நிலையில் திருமண வாழ்க்கை இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது. 25 ஆண்டுகள் கடந்த நிலையில் பிரேம்குமார் அண்மையில் தனது நண்பர்களுடன் இணைந்து பழைய மாணவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளார் .
இந்த சந்திப்பின் போது தனது பழைய காதலியை சந்திக்க அவர்களுக்குள் காதல் பற்றிக்கொண்டது சந்திப்புக்கு பின்னர் இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினார்கள் . இந்த விவகாரம் வித்யாவுக்கு தெரியவந்ததும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அடிக்கடி இடையே இந்த விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே மனைவியை தீர்த்து கட்டும் விபரீத முடிவுக்கு வந்துள்ளார் பிரேம்குமார் .
அதன்படி குண்டாக இருக்கும் மனைவிக்கு உடல் எடை குறைய ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு வித்தியாவை ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டின் கீழ்தளத்தில் காதலி சுனிதா பேபி தங்கியிருந்திருக்கிறார் . மேற்தளத்தில் பிரேம்குமார் தனது மனைவி வித்யாவுடன் தங்கியுள்ளார் .நள்ளிரவில் மனைவியிடம் மருந்து என மதுவை கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார்.
பின் மயங்கிய வித்தியாவை சுனிதா தேவியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் பிரேம்குமார் .பின்னர் சடலத்தை காரில் எடுத்து வந்து திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வீசிவிட்டு வித்யாவின் செல்போனை திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை செல்லும் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.
குப்பைத் தொட்டியில் அந்த செல்போனை கண்டெடுத்த நபர்கள் அதனை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தேவியையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.