Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புகை காரணமாக காற்று மாசுபாடு அடைந்து உள்ளது. இந்த காற்று மாசுபாடானது டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பரவத் தொடங்கியது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என்று அனைவரும் சுவாசிப்பதில் சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தடை விதித்தது.

ஆகவே மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள், பொது பயன்பாடுகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் நிலவி வருவதாக காற்று தர மேலாண்மை அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனையடுத்து டில்லி என்.சி.ஆர் பகுதியில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பொது பயன்பாடுகள், ரயில்வே, விமான சேவை போன்ற சிலவற்றை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் நலன் கருதி 6 முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் வகையில் டில்லி என்.சி.ஆர் பகுதி அதிகாரிகளுக்கு மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 26-ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. அதாவது டில்லி என்.சி.ஆர் பகுதியில் 5-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்று காற்று தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |