Categories
மாநில செய்திகள்

வேதா நிலையம்…. மேல்முறையீடு இல்லை…. தமிழக அரசு திட்டவட்டம்…!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்ற 2019ஆம் ஆண்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு விசாரணையின்போது போயஸ் தோட்ட இல்லத்தில் அரசுடைமையாக்கியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவும், ஏற்கனவே வழக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே பிரச்சினை தொடர்பாக அதிமுக வழக்கு தொடர முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகளின் உத்தரவுகளை ஏற்று கொண்ட காரணத்தினால் மேல்முறையீடு செய்ய தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |