ஈரான் நாட்டில் முதல்முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது 89 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ஈரானில் முதன் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து ஈரானுக்கு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே அங்கு பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தடுப்பூசிகள், அதிக உயிரிழப்புகளை தடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.