இங்கிலாந்தில் கொரோனாவும், ஓமிக்ரானும் போட்டி போட்டு மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் போடப்படுமா என்று கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 1 வாரத்தில் மட்டுமே கொரோனாவால் 5 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பில் 60% உறுதியாகியிருப்பது ஓமிக்ரான் தொற்று என்று இங்கிலாந்த் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான ஜாவிட் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்த் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான ஜாவிட் அந்நாட்டில் இனி வரும் காலங்களில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் காலகட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக வருவதற்கு வாய்ப்புள்ளதால் உடனடியாக இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அந்நாட்டில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டுமென்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகையினால் இங்கிலாந்தில் மீண்டும் பொது முடக்கம் போடப்படுமா என்று கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.