பிரபல நடிகரான இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய் படத்துக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் லீட் ரோலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. மேலும் பீஸ்ட் படப்பிடிப்பு தலத்தில் இருந்து விஜய்யின் போட்டோக்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் வைத்துள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடலானது வருகிற புத்தாண்டு அன்று வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும். அதாவது புதுவருடப்பிறப்பு அன்று சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் விஜய் பின்னணி பாடிய பாடல் வெளியாகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் இருக்கிறார்.