மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு முன்பாக ஜூலையில், முதல் DA மற்றும் DR உயர்வை வழங்கியது. மேலும் கொடுப்பனவு விகிதத்தை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. DA பொதுவாக வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இறுதியாக அக்டோபரில் கூடுதலாக அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது 2002-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தன் ஊழியர்களுக்கு மீண்டும் DA உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த முடிவு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி நடைபெற இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு தவிர மத்திய அரசு ஊழியர்கள் சில பேருக்கு புத்தாண்டில் பதவி உயர்வும் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கைகளின்படி அவர்களின் அகவிலைப்படி 2022 ஜனவரியில் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும். டிஏ உயர்வினால் அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரும். எனினும் 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை .ஆனால் AICPI குறியீட்டின் தரவுகளின்படி, புத்தாண்டில் 3 சதவீதம் DA அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2022 பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பாக உடல்தகுதி காரணிகள் தொடர்பான முடிவு விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் உயரும். அகவிலைப்படியை 3% உயர்த்திய பின் மொத்த DA 34 சதவீதமாகவும், அடிப்படை சம்பளமான 18,000 ரூபாயில், மொத்த ஆண்டு அகவிலைப்படி 73,440 ரூபாயாகவும் இருக்கும். இதனால் முதல்நிலை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6,480 ரூ அதிகமாக கிடைக்கும். அதிக பட்சம் அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியருக்கு ஆண்டுக்கு 20,484 அதிகமாக கிடைக்கும். அகவிலைப்படி அதிகரிக்கபடுவதால் அதனுடன் தொடர்புடைய வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துபடி போன்றவையும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இவ்வாறு இந்த புதிய அகவிலைப்படி உயர்வானது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது