Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரமற்ற உணவு…. அமைச்சர் கடும் எச்சரிக்கை…!!!

பேருந்துகள் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரமற்ற உணவு  வழங்குவதாக புகார் எழுந்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்,  டெண்டர் பெறப்பட்ட ஹோட்டல்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த முடியும்.  சாலையோர ஹோட்டல்களில் உணவின் தரம், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் பற்றி புகார் அளிக்கப்பட்டால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தி அது உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும் . டெண்டர் எடுத்திருந்தபோதிலும், பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டால் ஹோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Categories

Tech |