காவல்துறை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை காவல் நிலையம் சார்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி மங்களாம்மாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் மற்றும் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைல்டு லைன் அவசர தொலைபேசி எண்ணையும் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி தொலைபேசி எண்ணையும் தெரிவித்துள்ளனர்.