Categories
மாநில செய்திகள்

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்….. கணவன் கைது…..!!!!

அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெடுமொழி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பமாக கடந்த 13ம் தேதி பிரசவ நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில் 18ஆம் தேதி மாலை அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத லோகநாதன் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

யூடியூபை பார்த்து லோகநாதன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இந்த விபரீததால் லோகநாதனின் மனைவிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவியும் மயங்கி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து லோகநாதன் தனது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |