Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஒழுங்கா படிக்க மாட்டியா” மகளை திட்டிய தாய்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரியாக படிக்காத காரணத்தினால் தாய் திட்டியதால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடகால் பகுதியில் யுவலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யுவலட்சுமி சரியாக படிக்காத காரணத்தினால் அவரின் தாய் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த யுவலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.

அதன்பின் மகளை நீண்ட நேரமாகியும் காணவில்லை என தாயார் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். இதனையடுத்து யுவலட்சுமி வடகால் பகுதியின் அருகில் இருக்கும் கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சரியாக மாணவி படிக்கவில்லை என தாய் திட்டிய காரணத்தினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |