சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது சிறுபான்மை மக்களுக்கு என்றும் துணையாக இருப்பது திமுக அரசு. அன்பும், இணக்கமும், கருணையும் கொண்ட அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு சிறுபான்மை ஆணையத்தை கலைஞர் கொண்டு வந்தார்.
நம்முடைய மொழியால், இனத்தால் தமிழர்கள். வழிபாடு என்பது அவர்களின் விருப்பம். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசு மட்டுமே மக்களுக்காக அனைத்தையும் வழங்கி விடமுடியாது இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை என்று பேசியுள்ளார்.