Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற ராணுவ வீரர்கள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர்ப்பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஊழியராக பணியாற்றி விட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கலசனார் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது சாலையில் சென்ற பாண்டுரங்கன் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.

இதில் பாண்டுரங்கன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டுரங்கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி வந்த ராணுவ வீரரான விக்னேஷ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |