தொழிலாளி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் திடீரென தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சத்யராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சத்யராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.