ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாகவே மாறும். துணிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
சிக்கலான சில விஷயங்களை சாதகமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் இன்னைக்கு நல்லாகவே இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து இருக்கும். வேலை இல்லாத நபர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் ஓரளவு இருக்கு. இன்று காதல் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் செல்வம் சேரும் நாளாகவும் இன்றைய நாள் இருக்கும். உடல்நலத்தை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சுமாராகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்