தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றமாக ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை காட்டிலும் வேகமாக பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் மட்டும் நிலைமைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஒமைக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு நேரத்தில் கடற்கரையில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஊரடங்கு போடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.