கடக ராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் முடியும். மங்கல நிகழ்ச்சி மனையில் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சியில் இருக்கும் தடை விலகிச்செல்லும். இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் இருக்கட்டும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். பொருட்களை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஓரளவு நேர்த்தியாக இருக்கும். கூடுமானவரை கணவன் மனைவி இருவரும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் அது போதும்.
குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். அதோடு இன்று அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கு. பயணங்கள் உங்களுக்கு இன்று நல்லபடியாகவே இருக்கும். பயணங்களால் லாபமும் உங்களுக்கு கிடைக்கும். அதுபோல வழக்கு விவகாரங்களில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கு. காதல் விவகாரங்களில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருப்பது ரொம்ப நல்லது. இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்கள் எடுக்கக்கூடிய செயல்களில் வெற்றியும் இருக்கும். கூடுமானவரை இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.