Categories
மாநில செய்திகள்

OMICRAN: தமிழகத்தில் தீவிரம்…. அரசு பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்க்ளுக்கும், நோய் தடுப்பு விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்கவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றவும் மாவட்ட நிர்வாகங்கள் நகராட்சிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒமைக்ரான் தொற்று எதிரொலியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |