கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பணி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து கரூர் மாவட்ட திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் முக ஸ்டாலின் கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திக் கொடுத்திருக்கிறார். சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும்.
முதல்வர் பதவி ஏற்றது முதல் 6 மாத காலத்தில் பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் வாக்களித்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் அடுத்தடுத்து வர உள்ளது. நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று அடுத்த பிரதமரை உருவாக்கும் கிங்க் மேக்கராக ஸ்டாலின் உருவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.