Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. பதுக்கி வைத்த பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் அக்ரஹாரம் பங்களாதோட்டம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 17 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வடிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |